கட்டில் ஏன் உயரமா இருக்கு தெரியுமா? விலைமாது-வின் பதிலை கேட்டு மிருணாள் தாகூர் கண்ணீர்..!
Author: Vignesh21 October 2023, 1:15 pm
பாலிவுட் சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை மிருணால் தாக்கூர். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சீரியல் நடிகையாக தனது கெரியரை ஆரம்பித்த மிருணாள் குங்கும் பாக்யா தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அந்த சீரியல் தான் தமிழில் இனிய இருமலர்கள் என டப் செய்யப்பட்டு வெளியானது.
தமிழிலும் சூப்பர் ஹிட் அடித்து கோலிவுட் ரசிகர்களின் பரீட்சியமான முகமாக தென்பட்டார். தொடர்ந்து சில தொடர்களில் நடித்து வந்த அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர இந்தியில் 2018ல் வெளியான லவ் சோனியா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
இவரது நடிப்பில் வெளியான அப்படத்தில் மிருணாள் விலை மாதுவாக நடித்திருப்பார். இந்த ரோலில் நடிக்க பிரத்யேகமான நடிப்பு வரவேண்டும் என்பதற்காக அவர் உண்மையிலே விலைமாது பெண்களை சந்தித்து அவர்களின் அனுபவத்தை குறித்து கேட்டு கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
அதாவது மிருணாள் தாகூர் விலைமாதுவை பார்க்க சென்ற இடத்தில் கட்டில் வழக்கத்தை விட உயரமாக இருந்துள்ளது. இதுகுறித்து அவர் அந்த பெண்ணிடம் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு அந்த பெண் வாடிக்கையாளர்கள் வரும்போது அவர்களுடன் இருக்கும் போது என் குழந்தை கீழே படுத்து தூங்கிக் கொண்டிருக்கும்.
அதனால் தான் கட்டில் வழக்கத்தை விட உயரமாக அமைத்திருக்கிறோம். ஒரு நாளைக்கு 40 லிருந்து 50 பேர் வருவார்கள். எந்த ஒரு உணர்வும் இல்லாமல் உடலை விற்பனை செய்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார். மேலும், நீங்கள் ஏன் அழவில்லை சிரிக்கவில்லை என்ற கேள்விக்கு, எங்களுக்கு அழுகை சிரிப்பு வராது ஆரம்பத்தில் அதை செய்தோம் இப்போது எந்தவித உணர்வும் இல்லாமல் இருக்கிறோம் என்று மிருணாள் தாகூரிடம் தெரிவித்திருக்கிறார். இதைகேட்ட அந்த இடத்திலே மிருணாள் தாகூர் கண்ணீர் விட்டு அழுதுவிட்டாராம்.