‘நீங்க அரசியலுக்கு வந்தால் எங்க ஓட்டு உங்களுக்குத்தான்’.. லியோ படத்தை பார்த்த நரிக்குறவர்கள் குஷி…!!

Author: Babu Lakshmanan
21 October 2023, 3:59 pm

நீங்கள் அரசியலுக்கு வந்தால் நாங்கள் கண்டிப்பாக உங்களுக்கு தான் வாக்களிப்போம் என்று லியோ படத்தை பார்த்த மகிழ்ச்சியில் நரிக்குறவர் மக்கள் தெரிவித்தனர்.

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இயக்கத்தில் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த 19ஆம் தேதி அன்று திரைக்கு வந்த லியோ படம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் வடசென்னை பாரத் திரையரங்கில் காலை 9 மணி சிறப்பு காட்சிகளை காட்சிகளை காண வந்த அப்பகுதியில் உள்ள நரிக்குறவர்கள் டிக்கெட்டை கேட்டுள்ளனர். இதனால் திரையரங்க நிர்வாக சார்பாக 14 பேருக்கு சிறப்பு காட்சிகளுக்கான காட்சிகளுக்கான டிக்கெட்டை வழங்கி படம் பார்க்க வைத்தனர். அவர்கள் இருக்கையில் அமர்ந்து விசில் அடித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் படத்தை பார்த்து வந்தனர்.

பின்பு, திரையரங்கை விட்டு வெளியே வந்த பின்பு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அவர்களுக்கு உணவு வழங்கினர். அப்போது பேசிய நரிக்குறவ மக்கள், விஜய் அரசியலுக்கு வந்தால் நாங்கள் கண்டிப்பாக உங்களுக்கு தான் வாக்களிப்போம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

சமீபத்தில் நரிக்குறவர்கள் திரையரங்குகளில் அனுமதி மறுக்கப்பட்டு நிலையில், தற்போது விஜய் நடித்த லியோ படத்தை காண நரிக்குறவர்கள் ஆர்வம் காட்டியதை எடுத்து அவர்களை திரையரங்குக்குள் அனுமதித்ததை நரிக்குறவர்கள் மத்தியில் வரவேற்றனர்.

  • malavika mohanan shared the bad experience when she was 19 year old in mumbai local train ஓடும் ரயிலில் நடந்த கொடூரம்! பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மாளவிகா மோகனன்? அடக்கடவுளே!