மத வெறியை தூண்டி விடும் திமுக அரசு.. இதற்கு பலிகடா ஆவது இஸ்லாமியர்கள்தான் : வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
22 October 2023, 2:47 pm

மத வெறியை தூண்டி விடும் திமுக அரசு.. இதற்கு பலிகடா ஆவது இஸ்லாமியர்கள்தான் : வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு!!

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹீம்;- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே பாஜக கொடிக்கம்பம் நடப்பட்டு இன்று கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. ஆனால், மனிதநேய மக்கள் கட்சி, தமமுக உள்ளிட்ட இஸ்லாமியர்கள் அடிப்படையாகக் கொண்ட இயக்கமும் தீவிரவாதத்தை ஊக்குவிக்க கூடிய எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர்களுடன் இணைந்து திமுகவின் தூண்டுதலின் பெயரில் இஸ்லாமியர்கள், கொடி கம்பத்தை ஏற்ற விடாமல் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சில இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து அந்தப் பகுதியில் கொடிக்கம்பம் இருக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததற்கு இந்த கொடிக்கம்பத்தை அகற்றும் காவல்துறையினர் அதே பகுதியில் விசிக, திமுக கொடி இருப்பது காவல்துறையினர் கண்ணுக்கு தெரியவில்லையா என கேள்வி எழுப்பினார். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இடங்களில் பாஜக கொடியை வைக்க கூடாது என காவல்துறையினர் கூறுகின்றனர். அப்படி என்றால் பெரும்பான்மையான இந்துக்கள் இருக்கும் பகுதியில் எஸ்டிபிஐ போன்ற முஸ்லிம் கட்சி கொடியை இருக்கக் கூடாது என கூறுகின்றனரா.? இது மத வெறியை தூண்டிக் கூடிய விஷயமாக உள்ளது.

மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சியினர் பாகிஸ்தான் சவுதி அரேபியாவில் கட்சி நடத்தி வருகின்றனரா? 85 சதவீதம் இந்துக்கள் வாழ்கின்ற இந்தியாவில் கட்சி நடத்தி வருகின்றனர். தேர்தல் வருகின்றது என்பதற்காக திமுக அரசு செய்யும் சதி செயல், இந்து நம்பிக்கையை இழிவுபடுத்துவது, இந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர்களை தூண்டி விடக்கூடிய செயல்களை திமுக அரசு நிறுத்த வேண்டும் என எச்சரிக்கிறோம். அண்ணாமலை வீட்டின் அருகே கொடி கம்பம் ஏற்ற விடாமல் தடுத்த காரணத்தினால் அண்ணாமலை அறிவுறுத்தலின்படி நவம்பர் 1ம் தேதி முதல் 10,000 பாஜக கொடிக்கம்பங்கள் தமிழக முழுவதும் ஏற்றப்பட உள்ளோம். ஒவ்வொரு நாளும் 100 கோடி கம்பங்கள் இஸ்லாமியர் பகுதி உட்பட அனைத்து பகுதிகளும் ஏற்றப்பட உள்ளோம்.

பாஜக பொருத்தவரை தீவிரவாத செயலில் ஈடுபட்டவர்கள் ஹிந்து பேரறிவாளனாக இருந்தாலும், முஸ்லிம் பாட்ஷாவாக இருந்தாலும், நாளை கிறிஸ்துவமைப்பைச் சேர்ந்தவர்கள் தீவிரவாதம் செய்தாலும் எதிர்ப்போம், எங்களுக்கு தேசம் தான் முக்கியம். திமுக உட்பட பிற கட்சியினர் தேர்தலுக்காக இஸ்லாமியர்களை தூண்டிவிட்டு மோதல் போக்கை ஏற்படுத்துகின்றனர். எனவே இதனை யாரும் இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என வேலூர் இப்ராஹீம் கூறியுள்ளார்.

  • sai abhyankkar is the music director for allu arjun atlee project அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!