நடிகை கவுதமியை ஏமாற்றிய பாஜக பிரமுகர் அழகப்பன் தலைமறைவு.. போலீசில் புகார் : அதிரடி ஆக்ஷன் எடுக்க தீவிரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2023, 11:08 am

நடிகை கவுதமியை ஏமாற்றிய அழகப்பன் தலைமறைவு.. போலீசில் புகார் : அதிரடி ஆக்ஷன் எடுக்க தீவிரம்!!

பாஜகவில் நீண்ட வருடங்களாக பல்வேறு பொறுப்புகளில் இருந்துவந்த நடிகை கௌதமி திடீரென பாஜகவில் , அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து இருந்ததோடு, இது தொடர்பாக, பாஜக தலைமைக்கு கடிதம் ஒன்றையும் எழுதி இருந்தார்.

அந்த கடிதத்தில், பாஜகவில் அங்கம் வகிக்கும் அழகப்பன் என்பவர் தன்னை 20 வருடத்திற்க்கு முன்னர் நான் சம்பாதித்த சொத்துக்களை கவனிக்க என்னை தொடர்பு கொண்டார். நான் தாய் தந்தை ஆதரவு இல்லாதவள். ஒரு குழந்தையுடன் இருந்தேன். அதனால் அழகப்பனை நம்பினேன்.

ஆனால், எனது சொத்துக்களை, பணத்தை அழகப்பன் ஏமாற்றிவிட்டார். இது தொடர்பாக நான் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளேன். எனக்கு தமிழக முதல்வர் மீதும், காவல்துறை மீதும் நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், நடிகை கௌதமி அளித்த புகாரின் பேரில் அழகப்பன் என்பவர் குடும்பத்தினர் மீது சென்னை மத்திய குற்ற பிரிவுக்கு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். சொத்துக்களை அபகரித்ததாக கௌதமி கடந்த மாதம் புகார் அளித்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த நடவடிக்கை மேற்கொள்ளனர்.

ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துக்களை அபகரித்து விட்டதாக கௌதமி போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், அழகப்பன் குடும்பத்தினர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…