அரசு பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை… அரசு சித்தா மருத்துவர் கைது : குமரியில் அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவம்!!

Author: Babu Lakshmanan
23 October 2023, 2:57 pm

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அரசு பெண் மருத்துவரிடம் மற்றும் மாணவிகளிடமும் பாலியல் தொல்லை செய்த சம்பவத்தில் அரசு சித்தா மருத்துவர் ஆண்டனி சுரேஷ் சிங் என்பவரை கோட்டார் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் உள்ள மூகாம்பிகை தனியார் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர் கொடுத்த பாலியல் தொல்லை மற்றும் துன்புறுத்தல் காரணமாக, பயிற்சி பெண் மருத்துவர் தற்கொலை செய்த சம்பவமும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த கட்டமாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

நாகர்கோவிலில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர் ஆண்டனி சுரேஷ் சிங் என்பவர் தன்னிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக பெண் மருத்துவர் கொடுத்த புகார் கொடுத்துள்ளார். மேலும், மாணவிகளிடமும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார். இது சம்பந்தமாக கோட்டார் காவல் நிலையத்திற்கு பெண் மருத்துவர் மற்றும் மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.

நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தேடிவந்த நிலையில், அரசு சித்தா மருத்துவர் ஆண்டனி சுரேஷ் சிங் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். அவரிடம் மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால், மருத்துவர் அங்கு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பரிசோதனைக்கு அவர் ஒத்துழைக்காமால் போலீசாரிடம் நான் அரசு மருத்துவர் என்னையே கைது செய்துள்ளீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்பு அவரை போலீசார் சாமதானபடுத்தி நாகர்கோவில் கிளை சிறையில் அடைத்தனர். அரசு ஆயுர்வேத பெண் மருத்துவர் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Annamalai vs Cool Suresh Whip Trendஅண்ணாமலையை தொடர்ந்து கூல் சுரேஷ் சாட்டையடி… வைரலாகும் வீடியோ..!
  • Views: - 435

    0

    0