விக்னேஷ் சிவனால் மருத்துவமனையில் நயன்தாரா அனுமதி? வெளியான அதிர்ச்சி தகவல்..!
Author: Vignesh23 October 2023, 3:54 pm
நடிகை நயன்தாரா திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, தன்னுடை காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இரட்டை குழந்தைகளின் பிறந்தநாளை கொண்டாடினார். மேலும் அவர்களுக்காக பல தொழில்களை ஆரம்பித்து சொத்தினை சேர்த்து வருகிறார்.
இந்நிலையில் கணவர் விக்னேஷ் சிவன் சமைத்த உணவை சாப்பிட்டதால் நயன் தாராவுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகவும், உணவு ஒவ்வாமை காரணமாக வாந்தி எடுத்ததாகவும், இதனால் அவரது காதல் கணவர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தகாக கூறப்படுகிறது.
மருத்துவர்கள் சிகிச்சை அளித்த சில மணி நேரங்களில், நயன்தாரா நலமாகிவிட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த செய்தி குறித்து, நயன்தாரா – விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்து எவ்வித அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை, என்றும் நயன்தாரா முக அழகிற்காக சிகிச்சை பெற மருத்துவமனைக்கு சென்றதாகவும் சிலர் கூறுகிறார்கள்.