ரவிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக… முதன்முறையாக பெண் நியமனம் : ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க பலே திட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2023, 4:22 pm

ரவிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக… முதன்முறையாக பெண் நியமனம் : ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க பலே திட்டம்!!

கர்நாடகா சட்டசபை தேர்தல் கடந்த மே மாதம் நடந்தது. இதில் பாஜக தோல்வியடைந்து காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை இழந்தது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தல் தோல்வி என்பது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தான் தேர்தல் தோல்வியை தொடர்ந்து கர்நாடக மாநில தலைவராக உள்ள நளின் குமார் கட்டீல் விரைவில் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் கர்நாடகா பாஜக தலைவர் பதவி என்பது இந்த முறை ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு வழங்கப்படலாம் என்ற தகவல்கள் பரவின.

மேலும் பாஜக மாநில தலைவர் பதவியை பெற தமிழக பாஜகவின் முன்னாள் மேலிட பொறுப்பாளரான சிடி ரவி, உடுப்பி -சிக்கமகளூர் தொகுதி பாஜக எம்பியும், மத்திய அமைச்சருமான ஷோபா கரந்தலாஜே மற்றும் எடியூரப்பாவின் 2வது மகனும், தற்போதைய துணை தலைவருமான விஜயேந்திரா ஆகியோர் ரேஸில் உள்ளனர்.

இதில் சிடி ரவி மற்றும் ஷோபா கரந்தலாஜே ஆகியோர் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர். எடியூரப்பாவின் மகன் லிங்காயத்தை சமுதாயத்தை சேர்ந்தவர். தற்போதைய சூழலில் கர்நாடகாவில் பாஜக லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு தான் பதவியை வழங்குவதாக குற்றச்சாட்டு உள்ளது.

பாஜகவில் முதல்வராக இருந்த எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். அதோடு மாநில தலைவராக எடியூரப்பா நீண்டகாலம் பணியாற்றினார். இதனால் லிங்காயத் சமுதாயத்துக்கு மட்டுமே பாஜக முன்னுரிமை வழங்குவதாக குற்றச்சாட்டு உள்ளது.

பாஜக மாநில தலைவராக ஷோபா கரந்தலாஜேவை நியமனம் செய்ய பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் 2 முக்கிய விஷயம் உள்ளதாம். இதில் முதல் விஷயம் என்பது ஷோபா கரந்தலாஜே ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர். இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒக்கலிகர் சமுதாயத்தின் ஓட்டுக்களை பெற முடியும்.

ஆனால் ஷோபா கரந்தலாஜேவை தலைவராக நியமனம் செய்தால் எடியூரப்பாவும் சமாதானம் ஆகலாம். ஏனென்றால் ஷோபா கரந்தலாஜே எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளர். இதன்மூலம் எடியூரப்பாவை சமாதானம் செய்ய முடியும் என பாஜக மேலிடம் கணக்கிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  • Rashmika Mandanna injured at gym பெரும் சோகத்தில் மூழ்கிய ராஷ்மிகா மந்தனா…சிக்கந்தர் படப்பிடிப்பை நிறுத்திய படக்குழு..!