இஸ்ரேல் – ஹமாஸ் போரில் 6500 பேர் பலி… ஹமாஸின் டிரோன் தாக்குதல் வெற்றிகரமாக முறியடிப்பு ; இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

Author: Babu Lakshmanan
23 October 2023, 9:30 pm

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நடந்து வரும் நிலையில், டிரோன் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இஸ்ரேலுக்குள் புகுந்து கடந்த 7ம் தேதி பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பதிலுக்கு தங்கள் நாட்டு மக்களை பிணை கைதிகளாக பிடித்துச் சென்ற ஆத்திரத்தில் இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இருதரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. 17 நாட்களாக நீடித்து வரும் இந்த போரில் சுமார் 6 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோரை உயிரிழந்தனர்.

காசா எல்லை அருகில் இருக்கும் இஸ்ரேல் ராணுவ நிலைகளை குறிவைத்து ஹமாஸ்-இன் ஆயுத பிரிவு அல் குவாசம் பிரிகேடிஸ் ஹமாஸ் டிரோன் தாக்குதல் நடத்தியது. ஹிட்சிரம் நகரில் உள்ள விமானப்படைத்தளம், தஸ்லிம் நகரில் உள்ள ராணுவப்படை தளத்தை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஹமாஸ் நடத்திய டிரோன் தாக்குதலை முறியடித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இருக்கிறது. காசாவில் இருந்து ஏவப்பட்ட இரண்டு டிரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

  • asin is the first choice for vaaranam aayiram movie வாரணம் ஆயிரம் படத்தில் அசின்? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!