இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து… ரயில் பெட்டிகளில் சிக்கி சிதறிய உடல்கள் ; மீட்பு பணிகள் தீவிரம்..!!
Author: Babu Lakshmanan23 October 2023, 9:47 pm
இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாக்கா மாகாணம் கிஷோர்கஞ்ச் மாவட்டம் பைரப் ரயில் நிலையத்தில் இருந்து இகரொசிந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் டாக்கா நோக்கி புறப்பட்டுச் சென்றது. இந்த ரயில் புறப்பட்ட சில நிமிடங்களில் மாற்று தண்டவாள பாதைக்காக டிராக் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
மாற்று தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மாறிச் சென்று கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக, திடீரென எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் சரக்கு ரயில் வேகமாக வந்தது. இதில், எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் மீது சரக்கு ரயில் வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் ரயில் பெட்டிகள் தடம்புரண்ட நிலையில், அதில் பயணித்த 15 பேர் உயிரிழந்தனர். மேலும், 100 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.