தனுஷை உருகி உருகி காதலிச்சேன்.. ஒருதலை காதல் குறித்து புலம்பி தவிக்கும் பிரபல நடிகை..!

Author: Vignesh
24 October 2023, 11:30 am

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து சின்னத்திரை நடிகையாக பிரபலமானவர் ரேகா நாயர். ஹீரோயின் ஆக வேண்டும் என்ற கனவோடு கோடம்பாக்கத்தில் ரவுண்டு வந்த இவருக்கு பல ஆண்டுகளாக முயற்சித்தும் சின்ன சின்ன கதாபாத்திரங்களே கிடைத்தது. இவர் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல் படத்தில் அரை நிர்வாணமாக நடித்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.

இரவின் நிழல் படம் ரிலீஸ் ஆன சமயத்தில் ரேகா நாயர் அரை நிர்வாணமாக நடித்ததை குறித்து சர்சைக்குரிய வகையில் நடிகரும் சினிமா பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் மிகவும் தரை குறைவாக விமர்சனம் செய்திருந்தார். இதனால் கடும் கோபத்தில் இருந்த ரேகா நாயர் திருவான்மியூர் பீச்சுக்கு வாக்கிங் சென்ற சமயத்தில் பயில்வானை நேருக்கு நேர் சந்தித்து நடுரோட்டில் வாக்குவாதம் செய்தார். அப்போது அவரை அடிக்கவும் பாய்ந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆனது.

rekha nair-updatenews360

அந்த வகையில் சிறிதளவும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத நடிகையாக வலம் வரும் நடிகையாக ரேகா நாயர் இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்களின் வாய்ப்புகள் அவரின் வீட்டின் கதவை தட்டும் வகையில் உள்ளது. ரேகா நாயர் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக் கூடியவர் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் பேட்டி ஒன்றில் நடிகர் தனுஷ் மீது தனக்குள்ள காதலை வெளிப்படுத்தியது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த பேட்டியில் அவர் கூறியதாவது;- தமிழ் சினிமாவில் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது தனுஷ் தான் என்றும், தனக்கு மட்டும் திருமணம் ஆகாமல் இருந்திருந்தால் நிச்சயமாக எப்படியாவது தனுஷ்சை திருமணம் செய்திருப்பேன் என்றும், சமீபத்தில் தனுசை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போது அவரிடம் உங்களை ரொம்ப பிடிக்கும் என கூறியதாகவும், பலரும் அவரிடம் இதனை சொல்லியிருக்க வாய்ப்புகள் இருந்தாலும், அது சாதாரணமாக இருக்கலாம் ஆனால் தான் அப்படி சொன்னதற்கான மதிப்பு தன்னைத் தவிர யாருக்கும் தெரியாது அந்த காதலை மனதுக்குள்ளேயே வைத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Rekha-Nair-updatenews360

மேலும் பேசுகையில், ரேகாநாயர், பெண்கள் சேலையை அணிந்து வெளியில் சென்றால் ஆண்கள் இடுப்பில் கைவைத்தால் அதை அனுபவிக்கணும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். ஆனால் அந்த அர்த்தத்தில் நான் சொல்லவில்லை என்று ரேகா நாயர் வேறொரு பேட்டியில் விளக்கமும் அளித்தது குறிப்பிடத்தக்கது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி
  • Close menu