மதுபோதையில் கைதான ஜெயிலர் பட வில்லன் ; காவல்நிலையத்தில் அலப்பறை செய்யும் வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
25 October 2023, 2:42 pm

ஜெயிலர் படத்தின் வில்லன் நடிகர் விநாயகன் மதுபோதையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் மலையாள நடிகர் விநாயகன். இவர் எர்ணாகுளத்தில் உள்ள தனது வீட்டில் அதிக அளவு அதிகளவு சத்தம் எழுப்பியதால் பக்கத்து வீட்டுக்காரர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மதுபோதையில் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட விநாயகன் அங்கு காவல் நிலையத்தில் உள்ள அதிகாரியை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, விநாயகனை காவல்துறை கைது செய்து மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லபட்டார்.

இந்த நிலையில், மருத்துவமனையில் போலீசாருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 565

    0

    0