ஆதரவற்ற முதியவர் மீது இரும்பு கம்பியால் கண்மூடித்தனமாக தாக்குதல் ; கெஞ்சியும் விடாத போதை ஆசாமி ; ஷாக் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
25 October 2023, 4:40 pm

பழனியில் சாலையோரத்தில் படுத்திருந்த முதியவரை ஒருவன் இரும்பு கம்பியால் தாக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மது போதையில் அட்டகாசம் செய்த பாம்பு பிடி வீரரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் அடிவாரம், பேருந்து நிலையம், சன்னதி விதி, கிரிவலப் பாதை உள்ளது. இங்கு முதியவர்கள், மனநல பாதிக்கப்பட்டவர்கள், வீடற்று சாலையோரத்தில் தங்கியிருக்கும் நபர்களை சிலர் பணம் கேட்டு மிரட்டி தாக்குவதும் சம்பவங்கள், அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

அதே போல், நேற்று அதிகாலை சாலையோரத்தில் படுத்திருந்த முதியவர் ஒருவரை குடிபோதையில் வந்த ஒருவன், இரும்பு கம்பிகளால் தாக்கி துரத்தி வருவதும், அப்போது அந்த முதியவர் டீக்கடையில் தஞ்சம் புகுவதும், கடைக்காரர் தடுத்து அவரை அடிக்க விடாமல் தடுப்பதும், பின்னர் முதியவர் கையேந்தி கும்பிட்டு கெஞ்சுவதும் , மீண்டும் மீண்டும் அந்த முதியவரை அந்த நபர் அநாகரீகமாகவும், ஆபாசமாகவும் திட்டுவது, தாக்க முயற்சிப்பது குறித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://player.vimeo.com/video/877851640?badge=0&autopause=0&quality_selector=1&player_id=0&app_id=58479

இது குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து அடிவாரம் போலீசார் விசாரணை செய்ததில், அடிவாரம் பகுதியை சேர்ந்த முகேஷ் என்பவன் அப்பகுதிகளில் பாம்பு பிடிக்கும் வேலையும் செய்தவன், குடிபோதையில் முதியவரை தாக்கிய பிரச்சனையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Nayanthara Test movie news சிம்பு பிறந்த நாளுக்கு நயன்தாரா எடுக்க போகும் திடீர் முடிவு…ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்..!