குப்பை மேடாக காட்சியளிக்கும் கோவை.. 6வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம் : தீர்வு காணாத மாநகராட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
25 October 2023, 5:00 pm

குப்பை மேடாக காட்சியளிக்கும் கோவை.. 6வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம் : தீர்வு காணாத மாநகராட்சி!!

ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை பண்டிகைகளை ஒட்டி கோவை மாவட்டத்தில் உள்ள ஏராளமான சிறு குறு தொழில் நிறுவனங்கள் வணிக வளாகங்கள் கடைத்தெருக்கள் மற்றும் பொதுமக்கள் தங்களின் இல்லங்களில் வாழை மாவிலை பூக்கள் பழங்கள் உள்பட பல்வேறு பொருட்களை வைத்து ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை கொண்டாடினர்.

இந்த நிலையில் நான்கு நாட்கள் தொடர் விடுமுறையாக அமைந்தது இந்த வருடம் வந்த ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகை இதனை தொடர்ந்து கோவை முழுவதும் குப்பைகள் அல்லப்படாமல் குப்பை தொட்டிகள் நிறைந்து வழிந்து சாலைகளில் டன் கணக்கில் குப்பைகள் தேங்கியுள்ளது. இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் குப்பைகள் சாலை எங்கும் சிதறி காணப்படுவதுடன் துர்நாற்றமும் வீசி வருகிறது

இந்த நிலையில் கோவை மாநகராட்சியில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை வ ஊ சி மைதானத்தில் தொடர்ந்து ஆறாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறை இருந்து வரும் சூழ்நிலையில் தொடர் விடுமுறை, பண்டிகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாநகரம் முழுவதும் குப்பைகள் மிகுந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைவரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 420

    0

    0