அவரோட லைஃப்ல 3-வது இடம்தான் எனக்கு.. இமான் மனைவி ஓபன் டாக்..!
Author: Vignesh25 October 2023, 5:50 pm
கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான நடிகர் விஜயின் தமிழன் என்ற திரைப்படத்தின் மூலமாக திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார் இமான். இவர் பாடலாசிரியராகவும், இருந்து வருகிறார். விசில் படத்தின் மூலமாக பிரபலமடைந்த இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மைனா, கும்கி, மாசிலாமணி, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், போகன், விசுவாசம் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
விசுவாசம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் டி இமான் பெற்றுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு முதல் மனைவியான மோனிகா என்பவரை விவாகரத்து செய்து இரண்டாவதாக அமலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இமானும் அவரின் மனைவி அமலியும் அண்மையில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார்கள்.
அதில், அமலி பேசியபோது நான் அவரை வீட்டில் அத்தான் என்று தான் அழைப்பேன். என்னை ஆசையாக அம்மு என்று இமான் அழைப்பார். அவர் மிகவும் ரொமான்டிக்கான மனிதர். நிறைய சர்ப்ரைஸ்களை செய்வார். அவர் மிகவும் அமைதியானவர். எப்போதும் சந்தோஷமாக இருப்பார். அதனால், அவர் செய்யக்கூடிய செயல்கள் அனைத்திலும் அன்பு என்பது வெளிப்பட்டு கொண்டே இருக்கும். அவரது, வாழ்க்கையில் முதலில் மகளுக்கு முதலிடத்தை கொடுப்பார். இரண்டாவதாக இசைக்கு மூன்றாவது இடம் தான் எனக்கு என்று பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.