பூஜை போட்டு நிறுத்திவைக்கப்பட்ட கார், ஆட்டோ கண்ணாடிகள் உடைப்பு… 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்…! அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

Author: Babu Lakshmanan
25 October 2023, 7:14 pm

தருமபுரி ; அரூரில் வீடுகளின் முன்பு பூஜை போட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட கார், ஈச்சர், ஆட்டோ போன்ற வாகனங்களின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் மேல்பாட்சாபேட்டை, கீழ்பாட்சாபேட்டை, அசோகா பட்டறை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த விஜயதசமி, ஆயுத பூஜையொட்டி அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிலர், தங்களுடைய கார், ஈச்சர், ஆட்டோ, இருசக்கர வாகனம் ஆகியவற்றிற்கு பூஜை போட்டு விட்டு, சாலையின் ஓரத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்தனர்.

இன்று அதிகாலை வாகனங்களின் உரிமையாளர்கள் வீட்டின் வெளியே வந்து பார்த்த போது, தங்களது வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார், ஈச்சர், ஆட்டோ, இருக்கர வாகனம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சிடைந்தனர்.

இது குறித்து அக்கம்பக்கம் விசாரித்த போது, தில்லை நகர், மேல்பாட்சாபேட்டை, கீழ்பாட்சாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார் கண்ணாடிகள் உடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சிடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அரூர் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், மர்ம நபர் ஒருவர் கார்களின் கண்ணாடியை உடைக்கும் சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, கஞ்சா போதையில் இந்த சம்பவத்தை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

https://player.vimeo.com/video/877897037?badge=0&autopause=0&quality_selector=1&player_id=0&app_id=58479
  • secret relationship with VJ's Priyanka பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!