மீண்டும் ஃபார்முக்கு வந்த ஆஸி.,; நெதர்லாந்தை சுருட்டி வீசிய பவுலர்கள்.. அந்த சாதனையில் இந்தியாவுக்கு அப்புறம் இவங்க தான்..!!

Author: Babu Lakshmanan
25 October 2023, 9:37 pm

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 309 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – நெதர்லாந்து அணிகள் விளையாடின. இதில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீரர் வார்னர் (104), ஸ்மித் (71), லபுஷக்னே (62) ஆகியோர் சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர்.

தொடர்ந்து, இறுதிகட்டத்தில் பேட்டிங்கிற்கு வந்த மேக்ஸ்வெல், 40 பந்துகளில் சதம் அடித்து, உலகக்கோப்பை வரலாற்றி குறைந்த பந்தில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது.

கடின இலக்குடன் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி, ஆரம்பத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால், அதன்பிறகு, ஆஸ்திரேலியா பவுலர்கள் சிறப்பாக பந்துவீசியதால், அந்த அணி 90 ரன்னுக்கு சுருண்டது. ஜாம்பா 4 விக்கெட்டுக்களும், மிட்செல் மார்ஷ் 2 விக்கெட்டும், ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

309 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி, ஒருநாள் போட்டிகளில் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 2வது அணி என்ற சாதனையை படைத்துள்ளது. இந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. அதேவேளையில், நடப்பு உலகக்கோப்பை தொடரில் குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்த அணி, என்ற மோசமான சாதனையை நெதர்லாந்து அணி படைத்துள்ளது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 362

    0

    0