பாலத்தில் பறக்கவிடப்பட்ட பாலஸ்தீன கொடி… இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு ; கோவையில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
26 October 2023, 10:46 am

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்திய போது பாலத்தின் மீது பாலஸ்தீனக் கொடியை பறக்க விட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு.

கடந்த 24 ம் தேதி அனைத்து ஜமாத், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உக்கடம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் பொழுது உக்கடம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வரும் பாலத்தின் மீது ஏறி பாலஸ்தீன கொடியை சிலர் பறக்க விட்டுள்ளனர்.

இதனால் ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பை சேர்ந்த சபீர் அலி, மனித நேய ஜனநாயக கட்சியை சேர்ந்த அபுதாஹிர், ரபீக் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 143, 341, 290 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பாலஸ்தீன ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இந்திய அரசு நிலைப்பாடு கொண்டிருக்கும் வேளையில், அதற்கு ஆதரவாக கொடி பறக்கவிடப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?