பெண்களுக்கு ஆசை அதிகம்… ஆண்களால் திருப்தி படுத்தவே முடியாது – வைரமுத்துவின் சர்ச்சை பேச்சு!
Author: Shree26 October 2023, 5:28 pm
தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமா துறையில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதி இருக்கிறார். மேலும், இவர் இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார்.
இப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சாட்டி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து பல பெண்களும் கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்து இருந்தார்கள். பிறகு வைரமுத்து குறித்து பல விமர்சனங்களை சின்மயி எழுப்பி இருந்தார். இருந்தாலும் பலர் வைரமுத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார்கள். ஆனால், பாடகி சின்மயி கூறும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா? என்று சிலர் சந்தேகித்தும் வருகின்றனர். தொடர்ந்து சின்மயில் அவரை விமர்சித்து தான் வருகிறார். ஆனால், வைரமுத்து அதையெல்லாம் பெரிதுபடுத்திக்கொள்வதில்லை.
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், வைரமுத்து சமீபத்தில் கணவன் மனைவிக்கு இடையில் குடும்ப வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி முகம் சுளிக்க வைத்துள்ளார். பெண்களுக்கு இளம் வயதில் ஏற்படக்கூடிய ஆசையை காட்டிலும் 40 வயது 45 வயதுக்கு மேல் தான் ஆசை அதிகமாக இருக்கும். அதேபோல் ஆண்களுக்கு இளம் வயதிலே ஆசை அதிகரித்துவிடும். ஆனால் அவர்கள் போதைக்கு அடிமையாகிவிட்டால் அவர்களால் தங்களது துணையை திருப்தி படுத்தவே முடியாது. காரணம் போதை பழக்கம் ஆண்களின் வீரியத்தை குறைக்கும் என கூறியுள்ளார். வைரமுத்துவின் இந்த கருத்து சர்ச்சைக்குள்ளான விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.