ஃபயர் மோடில் வெளிவந்த சூர்யா 43 படத்தின் டைட்டில் – தரமான சம்பவம் இருக்கு!

Author: Shree
26 October 2023, 6:01 pm

தமிழ் சினிமாவின் முன்னணி இ நடிகரான சூர்யா டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருந்து வருகிறார். மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை படத்திற்கு படம் வேறுபடுத்தி காட்டும் சூர்யாவிற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் சூர்யாவின் 43வது படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். சுதா கொங்கரா – சூர்யா கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்து சக்கைப்போடு போட்ட திரைப்படம் சூரரை போற்று.

அடுத்ததாக தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. இப்படத்தின் டைட்டிலை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி ” புறநானுறு” என படத்திற்கு டைட்டில் வைத்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா உள்ளிட்டோர் படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் துவங்க உள்ளதாக தகவல்கள் கூறுகிறது. இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்களை மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 444

    0

    0