ரெண்டு நாளா புருடா விடுறாங்க… ஆளுநர் தொடர்ந்து இங்கையே இருக்கட்டும் : பிளேட்டை மாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்..!!!

Author: Babu Lakshmanan
27 October 2023, 1:29 pm

நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரையாவது ஆளுநர் ஆர்என் ரவி இங்கேயே இருக்கட்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் புருஷோத்தமன் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து, மணமக்களை வாழ்த்தி மேடையில் அவர் பேசியதாவது :- இந்த திருமணம் சீர்திருத்த மற்றும் சுயமரியாதை திருமணமாக நடைபெற்றுள்ளது. இதுபோன்ற சீர்திருத்த திருமணங்களுக்கு அண்ணா முதல்முறையாக முதலமைச்சராக 1967ல் பொறுப்பேற்றவுடன் சட்டப்பூர்வமாக்கினார்.

சென்னை மாநகரில் கட்டிய பாலங்களுக்கு ஒதுக்கிய தொகையை விட குறைத்து கட்டி, மீதிப்பணத்தை திரும்பக் கொடுத்தோம். ஆனால் அடுத்து வந்து அதிமுக, இந்த பாலத்தில் ஊழல் நடந்துள்ளது என கூறி ஜெயலலிதாவால் இரவோடு இரவாக கலைஞரை கைது செய்தார். அப்போது இந்த வழக்கை பொதுநல வழக்கு போட்டு போராடியவர் புருஷோத்தமன்.

பெரிய பதவியில் அமர்ந்து கொண்டு, பங்களாவில் இருந்து கொண்டு திராவிடம் என்றால் என்ன என்று கேட்கிறார்கள். இன்று இங்கு நடந்திருக்கும் திருமணம் தான் திராவிடம். திராவிடம்னா என்ன என கேட்க வைத்திருக்கிறதே அது தான் திராவிடம். இரண்டு நாட்களாக புருடா விட்டு கொண்டிருக்கிறாங்க அதையெல்லாம் பார்த்து இருப்பீர்கள்.

ஆளுநர் தொடர்ந்து இங்கையே இருக்கட்டும். அது இன்னொரு பிரச்சாரத்திற்கு வலுவாக சேர்ந்து கொண்டுள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தயவு செய்து இங்கு இருக்கும் ஆளுநரை மட்டும் மாற்றி விடாதீர்கள். நாடாளுமன்ற தேர்தல் வரையாவது இருக்கட்டும். மோடி தலைமையிலான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும், எனக் கூறினார்.

  • Perarasu Criticized Vijay about his TVK 2nd Year Event கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!