ஆளுநருக்கும், ஆளுநர் மாளிகைக்கும் பாதுகாப்பு கொடுங்க.. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது : ஜி.கே வாசன் தடலாடி!!!

Author: Udayachandran RadhaKrishnan
27 October 2023, 4:08 pm

ஆளுநருக்கும், ஆளுநர் மாளிகைக்கும் பாதுகாப்பு கொடுங்க.. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது : ஜி.கே வாசன் தடலாடி!!!

கோவையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வந்த ஜி.கே.வாசன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய ஜி.கே.வாசன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக் குறியாகியுள்ளது. குடியரசு தலைவர் சென்னை வரக்கூடிய சில மணி நேரங்களில் அதுவும் அவர் தங்க கூடிய இடத்தில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளதால் சாதாரண மனிதர்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கும் என்ற அச்சம் இருக்கிறது.

குறிப்பாக தமிழகத்தினுடைய பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது எனவும் மேலும் உளவுத்துறையின் செயல்பாடு கேள்விக்குறியாக உள்ளது.

மக்களின் அச்சத்தை போக்க வேண்டும். அந்த கடமை அரசுக்கு உண்டு இந்த சம்பவத்தை ஆழமாக விசாரிக்க வேண்டும். அதன் நோக்கம் என்ன என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமை என தெரிவித்த அவர், ஆளுநருக்கும் ஆளுநர் மாளிகைக்கும் முதலில் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் முக்கிய பிரச்சனை என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.

பொய்யான தகவல்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து விசாரித்து ஒரு காலக்கெடுவுக்குள் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியது அரசின் கடமை என்றும், நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் கடின உழைப்பால் உயர்ந்து மற்ற மாநில மாணவர்களுக்கு சவாலாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அதற்கேற்றவாறு நீட் தேர்வு சதவீதம் உயர்ந்து வருகிறது.

தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் காலத்தில் பெற்றோர்களையும் மாணவர்களையும் மீண்டும் நீட் தேர்வு என்ற பெயரில் குழப்ப வேண்டாம் கையெழுத்து இயக்கம் நடத்துவது என்பது மாணவர்கள் படிப்பில் இடையூறு ஏற்படுத்துகின்ற செயல்.

பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மாணவர்கள் கல்வி பயிலும் போது அதற்கு இடையூறாக இருக்கும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்துவது தேவையற்றது.

திமுகவிற்கு உண்மையில் நீட் தேர்வை எதிர்க்க வேண்டும் என்று நினைத்தால் சட்ட ரீதியாக செல்லக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும் அரசியல் ரீதியாக எடுத்துக்கொண்டு மாணவர்கள் பெற்றோர்களை குழப்புவது ஒருபோது சரியல்ல.

திமுக அரசு கொடுத்த வாக்குகளை நிறைவேற்றாத அரசாக உள்ளது. தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்ற காரணத்தினால் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் வளரக்கூடாது அதை முடக்க வேண்டும் என்ற நிலையில் எதிர்க்கட்சிகளில் கொடி கம்பங்களை அகற்றி வருகிறது.

சிறுபான்மையின் மக்கள் விடுதலை செய்யக்கூடிய நிலையில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது. மக்கள் மன்றத்தில் ஒரு பேச்சும் நீதிமன்றத்தில் ஒரு பேச்சும் என்பது அவர்களுடைய உண்மையான முகத்தை மக்கள் பார்த்துக்கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.

  • Shankar about Game Changer Reviews கேம் சேஞ்சர் ஒருவேளை.. ஷங்கர் உடைத்த சீக்ரெட்.. கொதிப்பில் ரசிகர்கள்!