32 வருட உழைப்பு… திறமைக்கு கிடைத்த பலன் – நடிகர் விக்ரமின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Author: Shree27 October 2023, 5:34 pm
படத்திற்கு படம் வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகர் என பெயரெடுத்தவர் நடிகர் விக்ரம். இவர் தமிழில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்து வருகிறார். என் காதல் கண்மணி படத்தின் மூலம் 1990ல் அறிமுகமானார்.
அதன் பின்னர் தொடர்ந்து பல தோல்வி படங்களில் நடித்து துவண்டுபோன விக்ரமுக்கு சேது படம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் பின்னர் காசி, ஜெமினி, தூள் , பிதாமகன் , அந்நியன் , தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
படத்திற்கு படம் தனது முழு உழைப்பை போட்டு திறமையான நடிப்பை வெளிப்படுத்தி அந்த படத்திற்காக தனது இயக்குனர் எப்படி கேட்கிறாரோ அப்படி உடலை வருத்தி திறமையான நடிகராக பார்க்கப்படுபவர் விக்ரம். திரைத்துறையில் போட்டிகள் பொறாமைகள் இன்றி ஜீரோ ஹேட்டர்ஸ் என்ற பெயரெடுத்திருக்கிறார்.
இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் விக்ரம் ஆரம்ப காலத்தில் படவாய்ப்பிற்காகவும், தனது திறமையை வெளிப்படுத்தவும் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். அப்போது தனக்கு தெரிந்தவர்களிடமெல்லாம் வாய்ப்பு கேட்டு கெஞ்சியுள்ளார். பின்னர் கிடைத்த சின்ன வாய்ப்புகளை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்ட விக்ரம் படத்திற்கு படம் தனது திறைமையை மெருகேற்றி இன்று தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் விக்ரமின் சொத்து மதிப்பு குறித்த தகவல் ஒன்று வெளியாகி எல்லோரையும் வியக்க வைத்துள்ளது. ஒரு படத்திற்கு ரூ. 25 கோடி முதல் ரூ. 35 கோடி வரை சம்பளம் வாங்கும் விக்ரமின் மொத்த சொத்து ரூ. 150 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.