அரசு பள்ளி வளாகத்திற்குள் நிர்வாணமாக கிடந்த பெண் சடலம்… விசாரணையில் அதிர்ச்சி!!!
Author: Udayachandran RadhaKrishnan27 October 2023, 7:25 pm
அரசு பள்ளி வளாகத்திற்குள் நிர்வாணமாக கிடந்த பெண் சடலம்… விசாரணையில் அதிர்ச்சி!!!
திருப்பூர் தாராபுரம் சாலை கே செட்டிபாளையம் பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
தற்பொழுது இந்த பள்ளியில் புதிய வகுப்பறை மற்றும் ஆய்வு அறைகள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் தங்குவதற்காக பள்ளியின் பின்புறம் தகரத்தில் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் தங்கள் அன்றாட பணிகளை செய்து வந்தனர் அப்பொழுது , புதிதாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது.
இதைத்தொடர்ந்து பள்ளியில் பணி புரியும் நபர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு சென்று பார்த்த பொழுது பணியாளர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த தகரக் கொட்டகைக்குள் 35 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் நிர்வாணமான நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
அவரது முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் உடனடியாக நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த பெண்மணி இறந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம், அதனால் தான் உடல் அழுகும் நிலையில் உள்ளது, வேறு எங்கேயோ கொலை செய்து இங்கு கொண்டு வந்து போட்டு இருக்கலாம் மேலும் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளாரா என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கையில் முடிவில் தான் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.