அந்த விஷயம் தேவைப்பட்டால் பாய் ஃப்ரெண்ட் வச்சுக்கோ.. ஜோவிகாவுக்கு அட்வைஸ் கொடுத்த வனிதா..!
Author: Vignesh30 October 2023, 12:04 pm
பிக்பாஸ் சீசன் 7 படு ஜோராக துவங்கி பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வனிதா மகள் ஜோவிகாவுக்கு ஆரம்பம் முதல் மக்களின் பேராதரவு கிடைத்து வருகிறது. பார்ப்பதற்கு மிகவும் அழகாக, அம்மாவையே போன்றே தெளிவாக, புத்திசாலித்தனமாக இருப்பதாக பலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், தனக்கு படிப்பு வரவில்லை என்பதால், ஒன்பதாம் வகுப்பு வரை படித்தேன். பின்னர் நின்று விட்டேன் என ஜோதிகா தெரிவித்துள்ளார். நடிப்பில் ஆர்வம் இருந்ததால் டிப்ளமோ படித்து முடித்து இருக்கிறேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.
முந்தைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சீசனில் நடிகை வனிதா கலந்து கொண்ட போது பலரின் கவனத்தை ஈர்த்து அனைவரையும் மிரள வைத்தார். நிகழ்ச்சிக்குப் பின்பும் ரியல் வாழ்க்கையில் கடுமையான நடிகை என்று காட்டி வந்தார் வனிதா.
இதனிடையே, இதற்கு முன்பு ஒரு பேட்டியில், கலந்து கொண்ட நடிகை வனிதா விஜயகுமார் பேசிய விஷயம் தான் தற்போது, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர், நான் ஜோவிகாவிடம் பாய் ஃப்ரெண்ட் வச்சுக்கோ என்று நானே சொல்லி இருக்கிறேன் என்றும், இப்போது ஜோவிகா பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வருகிறார். பாய் ஃப்ரெண்டு வைத்துக்கொண்டால் பிக்-அப், டிராப்-க்கு யூஸ் ஆகும் என என ஜோவிகாவிடம் நானே கூறினேன். ஆனால், அதுக்கு ஜோவிகா வேண்டாம் என்று கூறிவிட்டதாக வனிதா பேட்டியில் வெளிபடையாக பேசி இருக்கிறார். இதற்காக வனிதாவை நெட்டிசன்கள் மோசமாக திட்டி வருகிறார்கள்.