சொன்னதை செய்து காட்டிய இபிஎஸ்… அதிமுக பொதுச்செயலாளரான பின் முதன்முறையாக பசும்பொன்னில் தேவருக்கு மரியாதை!!
Author: Udayachandran RadhaKrishnan30 October 2023, 2:10 pm
சொன்னதை செய்து காட்டிய இபிஎஸ்… அதிமுக பொதுச்செயலாளரான பின் முதன்முறையாக பசும்பொன்னில் தேவருக்கு மரியாதை!!
அதிமுக பொதுச்செயலாளரான பின் எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக தேவர் குரு பூஜைக்கு சென்றுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை நடந்து வருகிறது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் காலையில் சென்றார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை நடந்து வருகிறது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் காலையில் சென்றார். அவரை தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் சென்றார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார்.
பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அவர் அங்கே சென்றுள்ளார். செல்லூர் ராஜு, உதயகுமார் உள்ளிட்ட மாஜி அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி உடன் இன்று முத்துராமலிங்கத் தேவர் 116வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை விழாவில் உடன் இருந்தனர்.
முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி அங்கேயே மாலை அணிவித்து வணங்கினார். தேசமும் தெய்வீகமும் தனது இரு கண்கள் என வாழ்ந்த மாமனிதர் முத்துராமலிங்கத் தேவர். அவரை வணங்குவது மிகப்பெரிய பாக்கியம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவருக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு பசும்பொன்னில் நிலவியும் கூட எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக தேவர் குரு பூஜைக்கு சென்றுள்ளார். அவருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்பும் கூட அவர் குரு பூஜைக்கு சென்றுள்ளார்.
இதன் மூலம் தென் மண்டலத்தில் எடப்பாடி கால் வைக்க ரெடியாகிவிட்டார். கொங்கு மண்டல தலைவர் என்ற பிம்பத்தில் இருந்து வெளியே வர எடப்பாடி முடிவு செய்துவிட்டார். முக்குலத்தோர்களை கவர அவர் முடிவு செய்துவிட்டார் என்றே எண்ண தோன்றுகிறது. இந்த குரு பூஜையோடு அதற்கான முன்னெடுப்புகளை அவர் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று அவருக்கு கடுமையான பாதுகாப்பு பிரச்சனை இருந்ததால்.. அவரை வெள்ளை டீ ஷர்ட்டில் பர்சனல் பாதுகாவலர்கள் தொடர்ந்து விடாமல் பின்தொடர்ந்து வந்தனர். அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாமே பின் தொடர்ந்து வந்தனர்.
இதனால் அங்கே பதற்றமான சூழ்நிலை நிலவியது. அவருக்கு எதிராக இன்று போஸ்டர்களும் கூட ஒட்டப்பட்டு இருந்தன. இருப்பினும் எடப்பாடி பழனிசாமி பயணத்தை ரத்து செய்யாமல் இன்று குரு பூஜைக்கு சென்றார்.
அதை தொடர்ந்து மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி.