கும்மிருவேன் கும்மி.. முத்தம்மா கொடுக்குற? கடும் கோபத்தில் ஆக்ஷனில் இறங்கிய விஜய் மனைவி..!

Author: Vignesh
31 October 2023, 11:10 am

உலக அளவில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள லியோ திரைப்படம் பல தடைகளை தாண்டி ரசிகர்கள் எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களே தற்போது வரை பெற்று வருகிறது. சிலர் லியோ படம் குறித்து கலையான விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் நடிப்பும் லோகேஷ் கனகராஜ் இயக்கமும் பட்டையை கிளப்புகிறது என்றும், படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கிறது என்றும், குறிப்பாக விஜய் ரசிகர்களுக்கு முழு விருந்தாகவே படம் உள்ளது என்றும், கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

SK-Leo-updatenews360

குறிப்பாக இப்படத்தில் விஜய் திரிஷாவின் ஜோடியை திரையில் பார்க்கவே ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர். இப்படத்தில் பார்த்திபன் (விஜய்யின்) அன்பான, அழகான மனைவியாக திரிஷா நடித்துள்ளார். இப்படத்தில் திரிஷா விஜய்க்கு லிப்கிஸ் கொடுக்கும் காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.

trisha - updatenews360 1

குறிப்பாக நண்பன் படத்திற்கு பின்னர் ஒரு முத்த காட்சியில் விஜய் நடித்திருக்கிறார். அதன் பின்னர் 11 வருடங்கள் கழித்து நடிகர் விஜய் லியோ படத்தில் லிப் லாக்கில் நடித்தது பற்றி பயில்வான் ஒரு உண்மையை தெரிவித்திருக்கிறார்.

Trisha - Udpatenews360

அதாவது த்ரிஷாவுடன் நடிக்க கூடாது என்று ஏற்கனவே மனைவி சங்கீதா எச்சரித்ததாகவும், அதையும் மீறி லிப் லாக் சீனில் வேற நடித்ததாகவும், இதனால் சங்கீதா வருத்தப்பட்டார்கள் என்றும் கூறப்படுகிறது எனவும் கூறியுள்ளார். மேலும், சங்கீதா கோபத்தில் இருப்பதாகவும், தன் பேச்சைக் கேட்காமல் த்ரிஷாவுடன் நடித்ததோடு மட்டுமல்லாமல் முத்தக் காட்சியில் நடித்ததாலும் விஜயுடன் மீண்டும் சண்டை போட்டு இருப்பதாகவும் பயில்வான் தெரிவித்துள்ளார்.

மேலும், விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கு தனது மகன் நடிகர் ஆகாமல் இயக்குநர் ஆக வேண்டுமென்பதே ஆசையாம். அதனையடுத்துதான் அவர் நேரடியாக லைகாவிடம் பேசி இந்த வாய்ப்பை பெற்றுக்கொடுத்ததாகவும், மகனை வைத்து விஜய்க்கு செக் வைக்க சங்கீதா முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த மாதிரி செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரே வழி தான் உள்ளது. விஜய் தனது மனைவியுடன் இணைந்து எடுத்த புகைப்படம் வெளியானாதான் இந்த வதந்திகளுக்கு ஒரு முடிவு கிடைக்கும் என்று பல ரசிகர்கள் தங்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.

  • வாடி வாசலில் களமிறங்கிய இளம் நடிகை…லேட்டஸ்ட் தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!