திமுகவின் இறுதிகாலம் தொடங்கியாச்சு… இனி இந்தப் பயம் எப்போதும் இருக்கும் ; அண்ணாமலை கொந்தளிப்பு!!

Author: Babu Lakshmanan
1 November 2023, 2:33 pm

தமிழகம் முழுவதும் பாஜக கொடிக்கம்பங்களை நட முயன்றதாக பாஜகவினரை கைது செய்த சம்பவத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை பனையூரில் உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீட்டின் அருகே பாஜக தொண்டர்கள் கொடிக்கம்பம் அமைத்தனர். ஆனால், அனுமதியின்றி அமைத்ததாகக் கூறி, அதிகாரிகள் மற்றும் போலீசார் அதனை அகற்றினர். அப்போது, போலீசாருடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பாஜக நிர்வாகி ஒருவர் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து, கொடிக்கம்பத்தை அகற்றியதால் ஆத்திரமடைந்த அண்ணாமலை, திமுக அரசை கடுமையாக விமர்சித்ததுடன், நவம்பர் 1ம் தேதி முதல் தினமும் 1000 கம்பங்கள் என 100 நாட்களில் 10 ஆயிரம் பாஜக கொடிக் கம்பங்கள் நடப்படும் என்று அறிவித்தார். அவரது அறிவிப்பை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கொடிக்கம்பங்களை நடும் பணியில் பாஜகவினர் முயன்றனர். அப்போது, அனுமதியின்றி கூடியதாக பாஜகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கைக்கு மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்தள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- தமிழகம் முழுவதும், பாஜக கொடிக்கம்பம் அமைத்துக் கொடியேற்ற முயன்ற தமிழக பாஜக தலைவர்களும், சகோதர சகோதரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக அரசின் இந்த அதிகார அத்துமீறலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மற்ற கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும் இடங்களில் கூட, பாஜக கொடிக்கம்பம் வைக்க அனுமதிக்காமல் திமுக தனது பாசிச முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் தமிழக பாஜக பின்வாங்கப் போவதில்லை.

1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சுமார் 75 ஆண்டுகள் அரசியலில் இருக்கும் திமுக, பாஜக தொண்டர்களின் உழைப்பைக் கண்டு பயந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.

இத்தனை ஆண்டு காலம், போலி தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து, மக்களை ஏமாற்றிக் கொள்ளையடித்து, குடும்ப முன்னேற்றத்துக்காக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுகவுக்கு, மக்கள் மத்தியில் இறுதிக் காலம் நெருங்கிவிட்டது. திமுகவின் பயம் இனி எப்போதும் தொடரும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 349

    0

    0