நீதிமன்ற உத்தரவு திமுகவுக்கு பொருந்தாதா..? பாஜகவை சொல்லிவிட்டு திமுக கொடிக்கம்பமா..? பொங்கிய நாராயணன் திருப்பதி..!!!
Author: Babu Lakshmanan1 November 2023, 4:27 pm
சென்னை – மயிலாப்பூரில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் திமுக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாஜக மாநில துணை தலைவர் வெளியிட்ட X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- பாஜக மாநிலத்தலைவரின் இல்லத்தருகே கொடி கம்பம் அமைத்து பாஜக கொடியேற்ற பல முறை அனுமதி கேட்டும் அனுமதி மறுத்த தி மு க அரசு, யாருக்கும் எந்த இடையூறும் இல்லாத வகையில் அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தை 300 க்கும் அதிகமான காவல்துறையினரை கொண்டு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு பாஜகவினரை கைது செய்து சிறையிலடைத்து.
மேலும், தமிழகம் முழுதும் இன்று பல மாவட்டங்களில் கொடியேற்ற முனைந்த பாஜக நிர்வாகிகளை, தொண்டர்களை கைது செய்து சிறையிலடைத்து வருகிறது பாஸிஸ திமுக அரசு. பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளையும், அரசு ஆணைகளையும் குறிப்பிட்டு அதனால் அனுமதி மறுக்கப்படுவதாக சொல்கிறது.
கீழே உள்ள புகைப்படம் – மூன்று நாட்களுக்கு முன்னர் கடந்த 29/10/2023 அன்று சென்னை மயிலாப்பூரில் மக்கள் நடமாடும் முக்கிய பகுதியில் தென் சென்னை தொகுதி பாராளுமன்ற உறுப்பினராலும், மயிலாப்பூர் சட்ட மன்ற உறுப்பினராலும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சிக்கு சட்டம் இல்லையா? நீதி மன்ற உத்தரவு தி மு க விற்கு பொருந்தாதா? சட்டத்தை மதிக்காதா தி மு க? இந்த கொடிக்கம்பம் உடனடியாக அகற்றப்பட வேண்டும். சட்டத்தை மீறி கம்பம் அமைத்து கொடியேற்றிய அனைத்து தி மு கவினரையும் கைது செய்ய வேண்டும் ஸ்டாலின் அரசு. தங்களை நடுநிலையாக செயல்படுவதாக அழைத்து கொள்ளும் சில ஊடகங்கள், இந்த விவகாரம் குறித்து அரசை கண்டிக்குமா? தி மு க கூட்டணி கட்சியினர் இது குறித்து வாய் திறப்பார்களா?
தி மு க அரசின் அராஜகம் இது!! ஜனநாயகத்தை சீர்குலைக்கும் அவலம் இது!!, என தெரிவித்துள்ளார்.