சிம்பு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாரு?.. பேட்டியில் உளறிய பிரபல நடிகை..!

Author: Vignesh
1 November 2023, 4:54 pm

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிலம்பரசன். இவர் நடிப்பில் கடைசியாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

இதை தொடர்ந்து அடுத்ததாக பத்து தல படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, 40 வயது ஆகியும் நடிகர் சிம்பு திருமணம் செய்யாமல் சிங்கிளாகவே உள்ளார். சினிமாவில் நுழைந்து நல்ல நல்ல படங்கள் நடித்துவந்த இவர் இடையில் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினார். இதனால், சரியாக படங்கள் நடிக்காமல் இருந்தார்.

simbu - updatenews360

இப்போது, தான் மீண்டும் உடல் எடையை எல்லாம் குறைத்து அடுத்தடுத்து படங்கள் நடித்து வருகிறார். தற்போது நடிகர் சிம்புவுக்கு தமிழ்நாட்டில் பெண்ணே கிடைக்கவில்லையாம், இதனால் ஆந்திராவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், சினிமா ஃபைனான்சியருமான ஒருவரின் மகளை நடிகர் சிம்பு திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

siddhi idnani - updatenews360.jpg 3

இந்நிலையில், கடந்த ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான சித்தி இத்னானி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். சிம்புவும் நீங்களும் காதலிக்கிறீர்களா? அந்த மாதிரியான தகவல் பரவுகிறது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சித்தி இத்னானி சமூக வலைதளங்கள் மற்றும் பத்திரிகைகளில் வரும் கிசுகிசு பற்றியெல்லாம் தான் யோசிப்பது கிடையாது என்றும், சினிமாவுக்கு வந்துவிட்டால் இதுபோன்று பேசத்தான் செய்வார்கள். இந்த கிசுகிசு எல்லாம் படிக்க நல்லா தான் இருக்கும். ஆனால், அதை மைண்ட்ல ஏத்திக்க கூடாது என்று வெளிப்படையாக பேசி உள்ளார்.

https://youtube.com/watch?v=TBtPDV7JrYE

தமிழ் நடிகர்களில் ரோஜா பூ கொடுத்து கல்யாணம் செய்ய ஆசைப்படும் நடிகர் யார் என்று கேள்விக்கு, அதற்கு சிம்பு தான் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது

  • Salman Khan Net Worth Releasedதலையே சுத்துது… சல்மான் கான் சொத்து மதிப்பு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
  • Views: - 359

    0

    0