மாலத்தீவில் 12 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு… ரூ.2.27 கோடி அபராதம் விதித்த மாலத்தீவு அரசு ; தத்தளிக்கும் மீனவ குடும்பங்கள்..!!

Author: Babu Lakshmanan
1 November 2023, 6:08 pm

தூத்துக்குடி மீனவர்கள் 12 பேர் மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு 2 கோடியே 27 லட்சத்து 43 ஆயிரத்து 190 ரூபாய் அபராதம் விதித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீனவ கிராமத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக தருவை குளத்தைச் சேர்ந்த மைக்கேல் பாக்கியராஜ் என்பவரது விசைப்படகில் கடந்த அக் 1ம் தேதி உதயகுமார், மைக்கேல்ராஜ் (21), அந்தோணி ஆன்சல் கிறிஸ்டோபர், அதிசய பரலோக திரவியம், மாதேஷ் குமார், தருவைகுளம் பகுதியை சேர்ந்த அந்தோணி செல்வசேகரன், ஆதிநாராயணன், மகேஷ்குமார், அன்பு சூசை மிக்கேல், விக்னேஷ், மற்றும் மணி, சக்தி உட்பட மொத்தம் 12 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

அப்போது, கடலுக்குள் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது மாலத்தீவு கடல் எல்லைக்குள் சென்று விட்டனர். இதையடுத்து 12 மீனவர்களையும் மாலத்தீவு கடலோர காவல் படையினர், கைது செய்ததுடன் படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆழ்கடல் மீன்பிடி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அந்தோணி ஜெயபாலன் மற்றும் தனியார் ஷிப்பின் நிறுவனத்தின் உரிமையாளர் கிஷோர் ஆகிய இருவரும் மாலத்தீவு நாட்டில் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர்.

மாலத்தீவு எல்லைக்குள் மீன்பிடித்ததாக 1 லட்சம் ரூபியா, அப்பகுதியில் சுறா போன்ற மீன்களை பிடித்ததற்கு 1 லட்ச ரூபியா, வலை உபயோகித்து மீன் பிடித்ததாக 20லட்சம் ரூபியா, மேலும், அந்நாட்டு உரிமம் இல்லாமல் அக்கடல் பகுதியில் இருந்ததாக சுமார் 20 லட்சம் ரூபியா (ரூபியா என்பது மாலத்தீவு நாட்டின் பணவிகித சொற்றொடர்) மொத்தமாக, இந்திய மதிப்பு 2 கோடியே 27 லட்சத்து 43 ஆயிரத்து 190 ஆயிரம் அபராதம் கட்டினால் படகுகளை விடுவிக்க முடியும் என்று அந்நாட்டு அரசு கூறி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 355

    0

    0