ரூ.15 லட்சம் கொடுத்தானா…? பிரதமர் மோடியை ஒருமையில் திட்டிய திமுக எம்எல்ஏ… சர்ச்சையை கிளப்பிய வீடியோ!!

Author: Babu Lakshmanan
1 November 2023, 7:44 pm

பிரதமர் மோடியை திமுக எம்எல்ஏ ஒருவர் ஒருமையில் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் – கீழ்கதிர்பூர் கிராமத்தில் வட்டார பொதுநிதியில் இருந்து சீரமைக்கப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழாவில் காஞ்சிபுரம் திமுக எம்எல்ஏ எழிலரசன் நேற்று கலந்து கொண்டார்.

அப்போது, ரேஷன் கடை திறப்பு விழா முடிந்த பிறகு, நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், திமுக எம்எல்ஏ எழிலரசனை முற்றுகையிட்டு, மகளிர் உரிமைத் தொகை தங்களுக்கு வரவில்லை என்று சரமாரி கேள்வி எழுப்பினர்.

இதனால் ஆத்திரமடைந்த அவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேனு சொன்னாரு-ல, அவரே கேட்டீங்களா..? என்று கூறி பிரதமர் மோடியை ஒருமையில் பேசினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இதற்கு பாஜகவினர் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

https://player.vimeo.com/video/880521325?badge=0&autopause=0&quality_selector=1&player_id=0&app_id=58479
  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ