கௌதமியை தொடர்ந்து பாஜகவில் இருந்து விலகும் பிரபல நடிகை.. இனி எல்லாமே காங்கிரஸ் தானாம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
2 November 2023, 10:49 am

கௌதமியை தொடர்ந்து பாஜகவில் இருந்து விலகும் பிரபல நடிகை.. இனி எல்லாமே காங்கிரஸ் தானாம்!!!

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான விஜயசாந்தி, 1998-ல் பாஜகவில் இணைந்தவர். பாஜகவின் மகளிர் அணி செயலாளர் பதவியும் அப்போதே விஜயசாந்திக்கு கிடைத்தது.

1999 லோக்சபா தேர்தலில் சோனியா காந்தியை எதிர்த்து விஜயசாந்தி போட்டியிடக் கூடும் என்றெல்லாம் தலைப்பு செய்திகளில் அடிபட்டது. ஆனால் அப்போது சோனியா காந்தி பெல்லாரி தொகுதியில் போட்டியிட்டார்.

தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக அதிமுகவுக்கும் பிரசாரம் செய்தார் விஜயசாந்தி. ஒருகட்டத்தில் தெலுங்கானா முழக்கத்தை முன்வைத்து தனிக்கட்சி தொடங்கினார். பின்னர் அப்போதைய டிஆர் எஸ் (இப்போதைய பிஆர்எஸ்) கட்சியில் விஜயசாந்தி இணைந்தார்.

அக்கட்சியின் மேதக் தொகுதி எம்.பி.யாகவும் 2009-ல் வென்றார் விஜயசாந்தி. 2014-ல் பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் ஐக்கியமானார்.

கடந்த 2020-ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து வெளியேறி மீண்டும் தாய் கட்சியான பாஜகவில் இணைந்தார் விஜயசாந்தி. தற்போது தெலுங்கானா சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் விஜயசாந்திக்கு பாஜக மேலிடம் முக்கியத்துவம் தரவில்லை.

இந்த நிலையில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைய விஜயசாந்தி முடிவெடுத்துள்ளதாக தெலுங்கானா தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!