ஃபுல் போதையில் புல் தரையில் மல்லாந்து கிடந்த இளைஞர்.. பாட்டு பாடியே ஓட விட்ட முதியவர்.. வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
2 November 2023, 12:58 pm

ஃபுல் போதையில் புல் தரையில் மல்லாந்து கிடந்த இளைஞர்.. பாட்டு பாடியே ஓட விட்ட முதியவர்.. வைரலாகும் வீடியோ!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேருந்து நிலையம் அருகில் குங்கும காளியம்மன் கோவில் செல்லும் வழியில் பாலத்தின் நடுவே இருந்த புல் தரையில் ஃபுல் போதையில் பஞ்சு மெத்தையில் படுத்தது போல் மல்லாந்து கிடந்தார் மதுபிரியர் ஒருவர்.

அப்போது ஒரு நாய் ஒன்று அவரது அருகில் சென்று மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தது.

அதைப் பார்த்த ஒரு பெரியவர் அந்த மது பிரியரை எழுப்பி விடுவதற்காக பக்கத்தில் சென்று யோவ் எந்திரியா அங்க வயர் மாத்துராங்களாம் எந்திரியா என எழுப்பி விட்டார்.

எழுந்ததுமே வீட்ல சண்டையா ஏன் இங்கபடுத்துருக்க வா பஸ் ஏத்திவிடுறேன் உன் வீட்டுக்கு வா என அழைத்தார்.

அந்த மதுபிரியரோ நா இப்ப எங்க இருக்கேனு கூட தெரியாம குழம்பி திரு திருன்னு முழித்து கொண்டிருந்தநிலையில். மதுப்பிரியரை தாலாட்டும் விதமாக பெரியவர் பழைய பாடல்களை பாட ஆரம்பித்தார்

யாரைத்தான் நம்புவதோ போதை உள்ளம் அம்மம்மா பூமியில் யாரு மஞ்சம்.. அடுத்தபடியாக குடிமகனே பெருங்குடிமகனே அதை கொடுக்கட்டுமா உனக்கு என்று ஆடிக்கொண்டே கலாய்த்தார்,

https://vimeo.com/880420306?share=copy

மேலும் மது பிரியரின் சூல்நிலைக்கு ஏற்றது போல் ஆடிக்கொண்டே பாடலை பாடிக் கொண்டிருந்தார் அந்தப் பெரியவர். அலப்பறை தாங்காமல் ஆளைவிட்டா போதும்டா சாமின்னு எந்தப் பக்கம் செல்வது என்று கூட தெரியாமல் தல தெரிக்க ஓடிவிட்டார் மதுபிரியர்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!