அக்கான்னு சொல்லிட்டு என்கிட்ட.. அவனை மன்னிக்க மாட்டேன்.. பரபரப்பை கிளப்பும் பிக்பாஸ் வினுஷா..!

Author: Vignesh
2 November 2023, 6:35 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்‌ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.

இந்த சீசனில் வெகு சீக்கிரத்தில் போட்டியாளர்களுக்கிடையே போட்டியும், மோதலும் உருவாகிவிட்டது. இதில், அனன்யா பாண்டே எலிமினேட் செய்யப்பட்டார். பவா செல்லத்துரை போட்டியில் இருந்து விலகிவிட்டார். அவரைத் தொடர்ந்து விஜய், யுகேந்திரன் , வினுஷா ஆகோயோர் எலிமினேட் செய்யப்பட்டார்.

இந்நிலையில், வினுஷாவின் உடல் குறித்து நிக்சன் விமர்சித்து இருப்பதற்கு நடிகை சனம் ஷெட்டி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். “நிக்சனிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை. இது Body shaming, Sexist மனநிலையில் உச்சக்கட்டம் எனவும், இதனால் தான் வினுஷாவை இவர்கள் மோசமாக நடத்துகிறார்களா? கமல் ஹாசன் இது குறித்து கேள்வி எழுப்ப வேண்டும்” என சனம் ஷெட்டி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய வினுஷா, பிக் பாஸ் வீட்டில் என்னை கொடுமைப்படுத்தினார்கள். பிரதீப் பண்ணதை கூட மன்னிச்சிடுவேன். ஆனால், இதனை மன்னிக்க மாட்டேன். என்னை அக்கா அக்கா அப்படினு பேசிட்டு, பாடி ஷேமிங் பண்ணி இருக்கான். எனக்கு வெளியே வந்ததும் அதிர்ச்சியை தான் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்

.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!