விழுப்புரத்தில் பிரபல தொழிலதிபருக்கு ஸ்கெட்ச்… 18 பேர் கொண்ட வருமானத் துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு!!
Author: Udayachandran RadhaKrishnan3 November 2023, 1:23 pm
விழுப்புரத்தில் பிரபல தொழிலதிபருக்கு ஸ்கெட்ச்… 18 பேர் கொண்ட வருமானத் துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு!!
விழுப்புரம் நகர பகுதியான சாலாமேட்டில் தொழிலதிபரான பிரேம்நாத் என்பருக்கு சொந்தமான கோல்டன் பார்க் தங்கும் விடுதி மற்றும் கிரானைட் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிரேம் நாத் வரி எய்ப்பு செய்ததாக புகார் வந்ததை அடுத்து அவருக்கு சொந்தமான சண்முகாபுரத்திலுள்ள இல்லம், சொகுசு விடுதி, கிரானைட் விற்பனை நிலையம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் 18 பேர் கொண்ட குழுவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதால் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மூன்று இடங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருமான வரித்துறை சோதனை மேற்கொள்வதால் சொகுசு விடுதியிலிருந்து ஊழியர்கள் யாரையும் வெளியில் அனுப்பாமல் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
அலுவலகம் , வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்து வருவதால் இல்லத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் கார், சொகுசு விடுதிகளில் உள்ள கார்களிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
பிரேம்நாத்திற்கு சொந்தமான தங்கும் சொகுசு விடுதியில் திமுகவின் முக்கிய பிரமுகர்கள் விழுப்புரம் வருகையின் போது தங்கும் இடமாக இருந்து வருகிறது. மேலும் திமுகவை சார்ந்தவர்களுக்கு கிரானைட் இவரிடமிருந்து சப்ளை செய்யப்பட்டுள்ளதால் அதன் அதனடைப்படையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.