பிரபல நடிகைக்கு லிப்லாக் கொடுத்த சிம்பு.. மெய் மறந்து ரசித்த இயக்குனர்..!

Author: Vignesh
3 November 2023, 5:47 pm

தமிழ் சினிமாவில் கவுதம் மேனன், மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமனார். அதன்பின் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட சில படங்களை கவுதம் மேனன் இயக்கினார்.

சமீபத்தில், பேட்டியளித்த கவுதம் மேனன் ‘தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை வைத்து தான் ஒரு படம் இயக்கும் சூழ்நிலை ஏற்பட்டதாகவும், அவருக்காக ஒரு கதை எழுத தொடங்கியதாகவும், ஆனால் அவர் ஆக்‌ஷன் படங்களில் நடிப்பவர் என்பதால், தனக்கு காதல் கதைதான் மனதுக்கு தோன்றியது என்று தெரிவித்தார்.

மேலும், கதை யோசித்த போது ‘இந்த உலகத்துல இவ்வளவு பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் ஜெர்சிய லவ் பண்ணேன்’ என்கிற வசனத்தைதான் முதலில் எழுதியதாகவும், பின்னர் அந்த கதையில் மகேஷ்பாபு நடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தநிலையில், அதன் பின்னர் தான் அந்த படத்திற்குள் சிம்பு வந்தார்’ என கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். இதனிடையே, சிம்புவை வைத்து மூன்று திரைப்படங்களை கவுதம் மேனன் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடிகர்களின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து பேசி சர்ச்சை கிளப்பு வரும் பயில்வான் சிம்பு குறித்தும் பேசியுள்ளார். அதில் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் லிப் லாக் காட்சியில், நடிக்கும் போது த்ரிஷாவும் சிம்புவும் மெய்மறந்து ஒருவருக்கொருவர் மாறி மாறி முத்தமிட்டு கொண்டனர். அதை பார்த்த இயக்குனர் கவுதம் மேனன் தத்ரூபமாக அமைவதால் கட் சொல்லாமல் தொடர்ச்சியாக படம் பிடித்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

  • asin is the first choice for vaaranam aayiram movie வாரணம் ஆயிரம் படத்தில் அசின்? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!