இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் மாயா S கிருஷ்ணன் என்ற போல்டான நடிகை போட்டியாளராக கலந்துக்கொண்டிருக்கிறார்.
நிறைய குறும்படங்களில் தனது போல்டான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான “வானவில் வாழ்க்கை” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு ரஜினியின் 2.o திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதன் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து உலக நாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் ஒரு விலை மாதுவாக நடித்தார். அந்த ரோல் ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்த்தது.
தற்போது தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்திலும் இவர் ஒரு நல்ல கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். மேலும், விரைவில் வெளியாக உள்ள நடிகர் விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.
இந்நிலையில், லியோ படப்பிடிப்பில் விஜய்யுடன் நடிகை மாயா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.