சந்தானம் ரூட்டை ஃபாலோ செய்யும் சதீஷ்.. கான்ஜுரிங் கண்ணப்பன் படத்தின் டிரைலர் வெளியானது..!
Author: Vignesh4 November 2023, 12:30 pm
காமெடி நடிகரான சதீஷ் கதாநாயகன் நடித்த நாய் சேகர், ஓ மை கோஸ்ட் திரைப்படம் அவர் நடித்து வருகிறார். பிரவீன் சரவணன் இயக்கவும், முஸ்தபா முஸ்தபா படத்திலும் நடிகர் சதீஷ் நடித்து வருகிறார். தற்போது, நடிகர் சதீஷ் கான்ஜுரிங் கண்ணப்பா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ் சேவியர் இயக்குகிறார். சென்னையில், பெரும் பொருட் செலவில் பழங்கால அருங்காட்சியகங்கள் அமைத்து இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
மேலும், முக்கிய வேடங்களில் நாசர், சரண்யா, பொன்வன்னன், ஆனந்தராஜ், ரெஜினா கசான்றா டிடிவி கணேஷ் நடிக்கின்றனர். இந்த நிலையில் கான்ஜுரிங் கண்ணப்பன் படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது.