திருப்பூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு… ரூ.2.48 லட்சம் சிக்கியது!!!
Author: Udayachandran RadhaKrishnan4 November 2023, 12:41 pm
திருப்பூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு… ரூ.2.48 லட்சம் சிக்கியது!!!
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் அங்கு லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிரேகா தலைமையிலான போலீசார் திடீரென சோதனை நடத்தினர்.
அப்போது திட்ட இயக்குனர் அலுவலக கணக்காளர் லோகநாதன் என்பரின் மேசை டிராயரில் இருந்து ரூ. 2.48 லட்சம் கணக்கில் வராத பணம் கைபற்றப்பட்டது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகநாதனை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.