பிரதமர் குறித்து திமுக எம்எல்ஏ அவதூறு பேச்சு : முற்றுகையிட சென்ற பாஜகவினர் குண்டுக்கட்டாக கைது!!
Author: Udayachandran RadhaKrishnan4 November 2023, 1:22 pm
பிரதமர் குறித்து திமுக எம்எல்ஏ அவதூறு பேச்சு : முற்றுகையிட சென்ற பாஜகவினர் குண்டுக்கட்டாக கைது!!
கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவி எம்பி.எழிலரசன் தனது தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டிடங்களை திறக்க பல்வேறு கிராமங்களுக்கு சென்று இருந்தார்.
அவ்வகையில் கீழ்க்கதிர்பூர் கிராமத்தில் நியாய விலைக் கடையை திறந்து திறந்து வைத்து அங்கு வந்திருந்த மகளிர் தங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வரவில்லை என முற்றுகையிட்டு கேட்டபோது, அதற்கு பதில் அளித்த சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் , பாரத பிரதமர் மோடி மற்றும் பாஜக நிர்வாகிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி காஞ்சிபுரம் மாவட்ட பாஜகவினர் எஸ் பி அலுவலகத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.
இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட பாஜக தலைவர் கேஎஸ்.பாபு தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் இல்லத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் முற்றுகையிட முயன்ற போது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களை கைது செய்ய முயன்ற போது அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கைது செய்ய கூடாது என பாஜகவினர் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது காவல்துறையினர் பாஜகவினரை குண்டு கட்டாக தூக்கி செல்லப்பட்டனர். இதில் பெண்கள் ஆண்கள் என அனைவரும் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இதில் கைது செய்தபோது உடன்பட மறுத்த மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபுவை குண்டுகட்டாக தூக்கிச் சென்ற காவல்துறையினரால் மேலும் பரபரப்பு உண்டானது.
தகவல் அறிந்து வந்த திமுகவினர் சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் ஒன்று கூடியதால் சற்று நேரம் அங்கு பதட்டம் நிலவியது.