அமைச்சர் உதயநிதி வீட்டின் முன் திரண்ட வியாபாரிகள் : போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 November 2023, 3:48 pm

அமைச்சர் உதயநிதி வீட்டின் முன் திரண்ட வியாபாரிகள் : போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்!!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வீடு, சென்னை பசுமைவழிசாலையில் உள்ளது. இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகளை அமைக்க கூடிய வியாபாரிகள் திரண்டு வந்து அமைச்சரை சந்திக்க வந்தனர்.

இதுகுறித்து வியாபாரிகள் தற்காலிக பட்டாசு கடை அமைக்க அனுமதி கேட்டு, தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளோம்.

ஆனால், இதுவரை தீயணைப்புத்துறை அனுமதி வழங்கவில்லை. இதனால், காவல்துறையிடம் முறையிட முடியாத நிலையில் இருக்கிறோம்.

தீயணைப்புத்துறை அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்திய போது, எங்களுக்கு அரசு சார்பில் அனுமதி வழங்குவதற்கான எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்தாக கூறியுள்ளனர்.

பட்டாசு வியாபாரத்துக்காக பல கோடி ரூபாயில் பட்டாசுகளை கொள்முதல் செய்து வைத்துள்ளோம். எனவே எங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால், தங்களுக்கு தற்காலிக கடைகளை அமைக்க அனுமதி வழங்க வலியுறுத்துமாறு அமைச்சர் உதயநிதியை சந்திக்க வந்தனர். ஆனால், போலீசார் தடுத்தி நிறுத்தி விட்டனர். ஆனால், காவல்துறையினரிடம் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…