கேஆர்பி அணையில் நீர்வரத்து அதிகரிப்பு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
5 November 2023, 11:48 am

கேஆர்பி அணையில் நீர்வரத்து அதிகரிப்பு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உருவாகிறது தென்பெண்ணை ஆறு. இந்த ஆறு தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களை கடந்து வங்கக்கடலில் கலக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கே.ஆர்.பி. அணை கட்டப்பட்டுள்ளது.

இந்த அணையில் சேமிக்கப்படும் தண்ணீர், குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கர்நாடகாவின் நந்தி மலை, தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப் பொழிவு இக்கும் போது கே.ஆர்.பி. அணைக்கு வரும் நீர்வரத்து அதிகமாக இருக்கும்.

தற்போது தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முழுக்கொள்ளளவான 52 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 50.50 அடியை தாண்டியுள்ளது.

இதனை தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி,அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் 502 கனஅடி தண்ணீல் 439 கன அடி நீர் தற்போது வெளியேற்றப்படுகிறது. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றம் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் ஆற்றின் கரையை கடக்க வேண்டாம் என்றும் ஆற்றில் இறங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடைகளை ஆற்றங்கரையேராம் கொண்டு செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…