அமைச்சர் எவ வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக ரெய்டு… கரூரில் திமுக பிரமுகரின் வீட்டில் தொடரும் சோதனை…!!
Author: Babu Lakshmanan6 November 2023, 11:03 am
தமிழகம் முழுவதும் அமைச்சர் எவ வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் நான்காவது நாளாக நடைபெறும் வருமானவரித்துறை சோதனையில் ஒரு இடத்தில் மட்டும் நிறைவு – மூன்று இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று முன்தினம் (3-ம் தேதி) முதல் வருமானவரித்துறை சோதனை தழிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.
கரூர் மாவட்டத்தில் 4 இடங்களில் சோதனை தொடங்கின. குறிப்பாக, கரூர் மாநகராட்சி பகுதியில் திமுகவை சேர்ந்த மறைந்த முன்னாள் கரூர் மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மாவின் வீடு, காந்திபுரம் பகுதியில் உள்ள சுரேஷ் என்பவர் நிதி நிறுவனம், வையாபுரி நகர் பகுதியில் உள்ள சுரேஷ் வீடு என தொடர்ந்து மூன்று இடங்களில் 4 நாட்களாக நடைபெற்று வருகிறது.
அலுவலகத்தில் உள்ள கோப்புகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய கணனிகள் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சோதனை நடத்தப்படுவதாக கூறப்பட்ட நிலையில், திமுகவை சேர்ந்த மறைந்த கரூர் மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மா வீட்டில் மட்டும் தற்போது சோதனை நிறைவு பெற்றது.
தொடர்ந்து சுரேஷ் என்பவர் வீடு, காந்திபுரம் பகுதியில் உள்ள அவரது நிதி நிறுவனம் தோட்டக்குறிச்சியில் முன்னாள் திமுக பேரூராட்சி கவுன்சிலர் வீட்டிலும் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து, மத்திய பாதுகாப்பு படை போலீஸரை காவலில் உள்ளனர். இன்று காலை நான்காவது நாளாக சோதனை நடைபெறுகிறது.