அரசு அதிகாரி கொலை வழக்கில் அதிரடி திருப்பம்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கார் ஓட்டுநர் : விசாரணையில் பகீர்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 November 2023, 4:26 pm

அரசு அதிகாரி கொலை வழக்கில் அதிரடி திருப்பம்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கார் ஓட்டுநர் : விசாரணையில் பகீர்!!

கர்நாடக அரசின் சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குநராக பொறுப்பு வகித்து வந்தவர் பிரதிமா.

நேற்று முன்தினம் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு சென்ற பிரதிமாவை இரவு 8 மணிக்கு மேல் அவரது சகோதரர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது அவரது அழைப்பை பிரதிமா எடுக்கவில்லை. இதனால் அச்சமடைந்த சகோதரர் மறுநாள் தனது சகோதரியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினர் தடயங்களை சேகரித்து விசாரணையை தொடங்கினர்.

இந்நிலையில் குற்றவாளி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கொலை நடந்த 48 மணி நேரத்துக்குள் போலீசார் குற்றவாளியைக் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக கிரணை பிரதிமா பணி நீக்கம் செய்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிரண் அவரை திட்டமிட்டு கொலை செய்துள்ளார். இதை அவர் ஒப்புக்கொண்டு போலீசில் அவர் வாக்குமூலமும் கொடுத்துள்ளார்.

கொலைக்குப் பின்னர் கிரண் பெங்களூருவில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாமராஜநகருக்கு தப்பி ஓடினார். தனிப்படை அமைத்து கிரணை தேடிவந்த போலீசார் அவரை சாம்ராஜ்நகரில் கைது செய்தனர்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?