ஆண்டவரே தீயாய் இருக்கு.. மிரட்டலான சண்டை காட்சிகளுடன் ‘KH234’ அறிமுக வீடியோ..!
Author: Vignesh6 November 2023, 6:53 pm
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் இந்தியன். ஷங்கர் இயக்கிய இப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்திருந்தார்கள்.
இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இது கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து பெரிதும் வெற்றிபெற்ற திரைப்படத்தின் இரண்டாம் பக்கம் தற்போது தயாராகி ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
இந்த முறை கமல்ஹாசன் , காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இளம் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, முன்னதாக விக்னேஷ் சிவன் ராஜ்கமல் புரடக்ஷனில் பிரதீப் ரெங்கநாதனை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. மேலும் இந்த படத்தில், கமலுக்கு ஜோடியாக நயன் கண்டிப்பாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் தான் நயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், கமலை வைத்து எடுக்கப்போகும் படத்தின் கதையை மணிரத்னம் முன்னதாகவே எழுதி முடித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், KH 234 திரைப்படத்துக்கு Thug Life என டைட்டிலுடன் மிரட்டலான டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசரில், “என் பேரு ரங்கராய சக்திவேல் நாயக்கன், நான் ஒரு கேங்ஸ்டர்” என கமல்ஹாசன் செம்ம மிரட்டலாக மாஸ் காட்டியுள்ளர் .