ஷகிப் உல் ஹசனுக்கு குட்பை சொன்ன மேத்யூஸ்… போட்டி முடிந்து இலங்கை அணி செய்த அதிர்ச்சி செயல்.. பாயப்போகும் ஐசிசி நடவடிக்கை..!!

Author: Babu Lakshmanan
7 November 2023, 2:07 pm

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி தோற்கடித்தது. இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே இரு அணிகளுக்கு இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. குறிப்பாக, வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் டைம்டு அவுட் முறையில் இலங்கை வீரர் மேத்யூஸ் ஆட்டமிழந்தார்.

பேட்டிங் வந்த அவர் அணிந்திருந்த ஹெல்மெட் கோளாறால், வேறு ஹெல்மெட் எடுத்து வரச் சொன்னார் ; இதனால் தாமதம் ஏற்பட்டது ; ஆனால், விக்கெட் இழந்த பிறகு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பேட்ஸ்மென் அடுத்த பந்தை எதிர்கொள்ள வேண்டும் என்ற விதியின் கீழ் அவுட்டானார்.

இதனால், அதிர்ந்து போன மேத்யூஸ், ஷகிப் உல் ஹசனிடம் மன்றாடினார். ஆனால், அவர் இசைந்து கொடுக்க மறுத்தால், வேறு வழியின்றி, ஒரு பந்தும் பிடிக்காமல், மைதானத்தில் இருந்து கோபத்துடன் வெளியேறினார். தொடர்ந்து, பேட் செய்த வங்கதேச அணிக்கு ஷகிப் உல் ஹசன் (90) மேத்யூஸ் பந்தில் அவுட்டானார். அப்போது, நேரத்தை குறிப்பிடுவது போன்று மேத்யூஸ் தனது கையை காண்பித்து பதிலடி கொடுத்தார்.

தொடர்ந்து, வங்கதேச வீரர் ஷான்டோ காலில் வலி ஏற்பட்டு ஆட்டத்தை சிறிது நேரம் நிறுத்தினார். அப்போது இலங்கை வீரர்கள் அம்பயருடன் இது குறித்து வாக்குவாதம் செய்தனர். இந்த சூழலில் போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றது. வெற்றிக்கு பிறகு இரு அணி வீரர்களும் கைகுலுக்க வேண்டும் என்பது விதியாகும்.

https://twitter.com/i/status/1721569739745431955

ஆனால், வங்கதேச வீரர்கள் கை குலுக்க இலங்கை வீரர்களை நெருங்கிய போது அவர்கள் விலகிச் சென்றனர். இலங்கை கேப்டன் குசால் மென்டிஸ் தலைமையில் மொத்த வீரர்களும் தங்கள் அறைக்குள் சென்றனர். இலங்கை அணியின் பயிற்சியாளர் குழு மட்டுமே எதிரணியுடன் கை குலுக்கச் சென்றனர்.

கிரிக்கெட்டின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட இலங்கை அணி வீரர்கள் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 590

    0

    0