நக்கல்-யா உனக்கு.. காமெடி வீடியோவை பதிவிட்டு மக்களுக்கு நன்றி சொன்ன பிரதீப்..!

Author: Vignesh
7 November 2023, 3:04 pm

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பிரதீப் ஆண்டனி மக்களிடையே நன்கு பரீட்சியமாகிவிட்டார். இவர் ‘அருவி’ என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர். அந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

அப்படத்தை தொடர்ந்து ‘வாழ்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வேறு எந்த ஒரு படத்திலும் பார்க்க முடியவில்லை. இதனிடையே பிரதீப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டுள்ளார்.

அந்நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே மக்களிடத்தில் நல்ல அபிப்ராயத்தை பெற்ற பிரதீப் எதிர்பாராத விதமாக பெண்களுக்கு பாதுகாப்பில்லை என கூறி ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டதால், கோபமடைந்த அவரது ரசிகர்கள், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், தொகுப்பாளர் கமல் ஹாசன் மற்றும் இணை போட்டியாளர்களைக் கண்டித்து சமூக ஊடகங்களில் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

pradeep-kamal-7

இதையடுத்து பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டது குறித்து பலர் தங்களது ஆதங்கத்தையும் வருத்தத்தையும் கூறி வருகின்றனர். இந்நிலையில், தனது சமூக வலைதளத்தில் தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்று பிரதீப் தெரிவித்துள்ளார். வடிவேலு காமெடி வீடியோ ஒன்றை பதிவிட்டு தனக்கு கிடைத்த ஆதரவுக்கு மிகவும் நன்றி கூட நின்றதற்கும் நன்றி என்னால முடிஞ்ச அளவுக்கு நல்ல நடிகராக முயற்சி செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!