RJ பிராவோ பாக்குற பார்வையே சரி இல்லை.. புதிய குற்றச்சாட்டை வைக்கும் மாயா..!

Author: Vignesh
7 November 2023, 5:55 pm

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.

கடந்த வாரம் பிரதீப் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சிகப்பு கொடி காண்பித்து மாயா மற்றும் அவருடன் இருந்த ஒரு சில பெண் போட்டியாளர்கள் ரெட் கார்ட் கொடுத்து பிரதீப்பை வெளியே அனுப்பினார்கள். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கமெண்ட்கள் வந்த வண்ணம் உள்ளன.

bigg boss 7 tamil-updatenews360

இந்நிலையில், மாயா பூர்ணிமா மற்றும் ஐசு மூவரும் RJ பிராவோ குறித்து பேசியுள்ளனர். RJ பிராவோ பார்க்கிற பார்வை கொஞ்சம் கூட சரியில்லை. தப்பான கண்ணோட்டத்தில் பார்ப்பது போல் இருக்கிறது. RJ பிராவோ எப்போதும், மூஞ்சை பார்த்து பேசுவது கிடையாது. கீழே ஒரு மாதிரி பாக்குறாரு, உங்க பின்னாடி அந்த இடத்தை அப்படி பார்த்தார் என்று RJ பிராவோ குறித்து பேசியுள்ளனர்.

  • Mamitha baiju open talk about Jananayagan Movie ஜனநாயகன் படத்தில் பல சுவாரஸ்யம் இருக்கு… மமிதா பைஜூ உடைத்த ரகசியம்..!!