கள்ளக்காதல் செய்து வரும் திமுகவுக்கும் பாஜகவுக்கும் விரைவில் திருமணம் : அதிமுக பொன்னையன் கிண்டல்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 November 2023, 7:39 pm

கள்ளக்காதல் செய்து வரும் திமுகவும் பாஜகவுக்கும் விரைவில் திருமணம் : அதிமுக பொன்னையன் கடும் விமர்சனம்!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஆண்டார் குப்பம் பகுதியில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், 94% பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ளதால் இடைக்காலத் தீர்ப்பு அவருக்கு சாதகமாக வந்துள்ளது என்றும் எந்த மேல்முறையீட்டுக்கு சென்றாலும் இபிஎஸ் தலைமையிலான அதிமுக வெற்றி பெறும் என்றும் இதுவரை எந்த மேல்முறையீட்டிலும் ஓபிஎஸ் தரப்பு வெற்றி பெற்றதில்லை என்று பொன்னையன் தெரிவித்தார்.

ஓபிஎஸ் புகழேந்தி யார் வழக்கு தொடுத்தாலும் கடந்த காலத்தில் தோற்றுப் போனது போல தோற்றுப் போவார்கள். நாகாலாந்து மக்கள் நாய் கறி சாப்பிடுகிறார்கள் என்று கூறிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி மீது வழக்கு தொடர்ந்து அவரை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி என்பதற்கு பதிலாக அமைச்சர் என்று குறிப்பிட்டார். ஆர் எஸ் பாரதியை திமுக அமைச்சரை கூண்டில் நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தினத்தந்தி தொலைக்காட்சியில் படித்துப் பார்த்தால் தான் பேசியதை தெரிந்து கொள்ளலாம் கூறி பொன்னையன் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் .

சசிகலா தினகரன் ஓபிஎஸ் ஆகியோரை செல்லாக்காசு ஆகிவிட்டோம் பாஜக போட்ட வழக்கை வென்று விட்டோம் இதுவரை வந்த தீர்ப்புகள் எல்லாம் எங்கள் பக்கம் வந்துள்ளது . எந்த மேல்முறையீடு செய்தாலும் நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாக தான் உள்ளது.

திமுக பாஜகவுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டு கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார்கள் கோடிகோடியாக சம்பாதித்துள்ளனர் அவர்களை கூண்டிலே ஏற்ற வேண்டும் என்றார்.

வாஜ்பாய் ஆட்சியில் செய்தது போல தற்போதும் திமுக அதே போன்று உறவாடுகிறது நாங்கள் உறவை துண்டித்த பிறகு சிறை செல்லாமல் ஊழல் வழக்கில் இருந்து தப்பிக்க பாஜகவுடன் கூட்டணி வைக்க மீண்டும் திருமணம் செய்து கொள்ள பார்க்கிறார்கள் திமுகவினர் என அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்தார்.கூட்டணி குறித்த முடிவுகள் இன்னும் மூன்று மாதத்திற்கு நெருக்கத்தில் தான் முடிவு செய்யப்படும் குஜராத் தேவகவுடா எல்லாம் பிரதமர் ஆனர்களே அது போன்று இந்தியாவை பாராட்டக்கூடிய அளவிற்கு உள்ள எடப்பாடி பழனிச்சாமியும் பிரதமர் ஆவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்

பொய்யை கூறி நீட் தேர்வை ரத்து செய்கிறேன் என்று கூறி பொதுமக்களை இளைஞர்களை ஏமாற்றி வாக்குகள் பெற்று முதலமைச்சராக பதவி ஏற்றார்கள் இப்போது மீண்டும் தொடர்ந்து இளைஞர்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை பெற மக்களவைத் தேர்தலிலும் பொய் வாக்குறுதியை கூறி நீட் எதிர்ப்பு கையெழுத்து வாங்குகிறார்கள் என்று குற்றம் சாடினார்.

முப்பதாயிரம் கோடி கொள்ளையடித்ததை அவர்களது அமைச்சரான பி டி ஆர் தியாகராஜன் தெரிவித்துள்ளார் இந்த ஊழல் பட்டியல் வழக்கு
மத்திய அரசிடம் உள்ளது ஊழல் வழக்கில் நிச்சயம் திமுக குடும்பத்தினர் சிறைக்கு செல்வார்கள் என்றார்

ஆளுநரிடம் ஆதாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது அதன்படி திமுக குடும்பம் ஊழல் குற்றச்சாட்டில் சிறை செல்லும் எடப்பாடியார் ஆட்சி கட்டிலில் ஏறுவார் என அவர் தெரிவித்தார்.

மேலும் கும்மிடிப்பூண்டி பொன்னேரி தொகுதி பொறுப்பாளராக தான் உள்ளதால் அதிக வாக்குகள் பெற்று தரும் பூத் கமிட்டிக்கு தங்கம் பரிசாக வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

40,000 வாக்காளர்கள் உள்ள சோழவரம் ஒன்றியத்தில் ஒரே ஒரு பெண் பூத் கமிட்டி உறுப்பினர் மட்டுமே வந்ததால் வராதவர்கள் நீக்கப்படுவார்கள் எனவும் அவர் எச்சரித்தார்..

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!