அண்ணாமலையை வரவேற்க காத்திருந்த சூர்யா சிவா.. இடையில் புகுந்த போலீசார் : கொந்தளித்து போட்ட பதிவு!!!

Author: Udayachandran RadhaKrishnan
8 November 2023, 9:42 pm

அண்ணாமலையை வரவேற்க காத்திருந்த சூர்யா சிவா.. இடையில் புகுந்த போலீசார் : கொந்தளித்து போட்ட பதிவு!!!

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண் மற்றும் ஓ.பி.சி. அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவா ஆகியோருக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பொதுவெளியில் வெளியாகி பெரும் பரபரப்பு எழுந்தது.

இந்த ஆடியோவில் ஆபாசமாக திட்டி திருச்சி சூர்யா சிவா பேசியதால் பாஜகவின் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பாஜகவிலிருந்து விலகுவதாக திருச்சி சூர்யா அறிவித்தார்.

இதனிடையே திருச்சி சூர்யா சிவா அதிமுகவில் சேர உள்ளதாக தகவல் பரவின. இதையடுத்து திருச்சி சூர்யா சிவா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக அண்ணாமலை அறிவித்தார். அவரை மீண்டும் பாஜகவில் இணைந்து பணியாற்றி அறிவுறுத்தினார்.

இதையடுத்து அன்றே அவர் பாஜகவில் இணைந்தது மட்டுமல்லாமல் மீண்டும் ஓ.பி.சி. அணியின் மாநில செயலாளர் பொறுப்பில் தொடரவும் செய்தார்.

பின்னர் என்மண் என் மக்கள் யாத்தரையில் தீவிரம் காட்டி வரும் அவர், திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் நடந்த யாத்திரையில் பங்கேற்க வந்த அண்ணாமலைக்கு பலமான வரவேற்பு படலம் தயார் செய்தார்.

இந்நிலையில் அண்ணாமலையை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த தீபாவளி பட்டாசுகளை காவல்துறை தடுத்து நிறுத்திவிட்டதாம்.. இதனால் கோபம் அடைந்துள்ளார் திருச்சி சூர்யா சிவா.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை திருச்சி சூர்யா சிவா வெளியிட்டுள்ளார்.. “தமிழ்நாட்டில் 43 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை தடுப்பதற்கு முடியவில்லை. கோயம்புத்தூரில் ஐ.எஸ்.ஐ வைத்த வெடிகுண்டைத் தடுக்க முடியவில்லை. ஆனால், அண்ணன் அண்ணாமலை அவர்கள் கலந்து கொள்ளும் ஸ்ரீரங்கம் நிகழ்ச்சியில் வரவேற்பதற்கு வைத்திருந்த தீபாவளி பட்டாசு வெடிகளை தமிழ்நாடு காவல்துறை தடுத்திருக்கிறது. தமிழ்நாடு போலீஸார் ஸ்காட்லாந்து போலீஸாருக்கு நிகரானவர்கள்’ என்பதை நிரூபித்திருக்கிறது. தமிழ்நாடு காவல் துறையை வெகுவாக பாராட்டுகிறேன்.” என்று கூறியுள்ளார்.

  • கவின் படத்திலிருந்து விலகிய அனிருத்…படக்குழு திணறல்..!இதெல்லாம் ஒரு காரணமா?
  • Views: - 518

    1

    0